Thursday 15 December 2011

தபாங்.......... சாரி ஒஸ்தி


கதையெல்லாம் சொல்லி விமர்சனம்லாம் நமக்கு எழுதவும் வராது இந்த படத்துக்கு அது தேவையும் இல்லை.

நேத்து பார்த்தேன்.தவறு என் பக்கம் தானோ என்னவோ ஒவ்வொரு சீனுக்கும் தபாங்கை மனசுக்குள் ஒப்பிட்டுக்கொண்டே இருந்தது.

சோனாக்‌ஷி சின்ஹாவின் அழகும்,நளினமும்,நடிப்பும் ரிச்சாவிடம் இல்லை கண்டிப்பாக.

குடிகார தந்தையை இழுத்துப்போகும் பொழுது.சிம்பு தன் சகோதரனை தம்பி என உச்சரிக்கும் போது, “ சந்தோஷமா இருக்கு நீங்கள் முதன் முதலாக தம்பி என் விளித்தது” என சொல்வது.எங்கேயுமே சோனாக்‌ஷியை நெருங்க்வே முடியவில்லை.


சிலம்பரசன் மட்டும் என்ன முதலில் சல்லுவின் படத்தை எடுத்து நடிக்கும்போதே நிறைய ஹோம் வொர்க் பண்ணிருக்கனும்.சல்மான் படத்தில் அடிக்கடி உச்சரிக்கும் “கமால் கர்த்தேகோ” வுக்கு பதிலாக சிலம்பரசன் எதேதோ பேசுகிறார் சீனுக்கு ஏத்தாற்போல ஆனால் எங்குமே ரசிக்கும் படி இல்லை. குறிப்பா இறந்து போன மாமனாரை நினைத்து சொல்லும் “ வித்தியாசமான ஆளுயா நீ” கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாமல். தபாங்கை பார்க்கும் போது இருந்த , “ அடப்பாவி மனுஷா இப்படி செஞ்சிட்டானே” என்ற உணர்வு ஒஸ்தியில் வரவில்லை. தரணிக்கு வீழ்ந்து போன தன்னோட மசாலா டைரக்டர் இமேஜை திரும்பி எடுக்கனும்.சிலம்பரசனுக்கு தன் புகழ்பாட ஒரு படம் வேணும். என்ன பண்ணலாம் எடு தபாங்கை.......

ஐயா சிக்ஸ் பேக்னா இவிங்களுக்கு என்னன்னு தெரியுமா இல்லையா??? சும்ம நெஞ்ச வத்த வச்சிக்கிட்டு வயித்துக நாளு கோடு வர வச்சிட்டா சிக்ஸ் பேக்கா அதும் இவர் உடம்ப முறுக்கும் போது சட்டை கிழியுதாம்.போதும் டா சாமி.....செய்வதை திருந்தச்செய்யனும் இல்லைன்னா மூடிக்கிட்டு இருக்கனும்.அந்த விஷயத்தில் சோனு சூதுக்கு நல்ல கட்டிங்ஸ் அவர் முன்னாடி இவர் சட்டைய கழட்டி சீன் போட்டுருக்கவே கூடாது. பொழச்சி போங்கடோய்.....

சிலம்பரசன் படம் நெடுக சொல்லும். “ இந்த காவல் துறை........, நீ அடிச்சா அடிப்பேன்,மிதிச்சா மிதிப்பேன்,etc எதுவுமே ரசிக்கும்படியோ சீனுக்கு முழுசும் ஒத்து வரும்படியோ இல்லை. நோய்வாய் பட்ட தந்தையை பார்க்க மருத்துவமணை சென்று தன் இருக்கத்தை உடைத்து கண்ணீர் வடிக்கும் சீனில் சல்லுவயும் சிலம்பரசனையும்  ங்கொய்யாலே கம்பேர் பண்றதே பாவம்யா...ஒரு ஃபீல் இல்லை மண்ணும் இல்லை.

படம் குடியும்மோது கண்ணாடியை அர்பாஸ் துடைத்து கொடுக்கும் சீன் அழகா இருந்தது உதட்டோரம் நம்மை அறியாமல் ஒரு புன்னகை கொடுத்தது. அதே சீன் இங்கே உதட்டோரம் ஒரு பிதுக்கலைத்தான் கொடுத்தது.

சந்தானம் எப்பவும் போல டைமிங்கா பேசுறேன் பேர்வழின்னு கடுப்புதான் ஏத்துறாரு.ஆனா ஜால்ரா நல்லா அடிக்கிறாரு. சிவாஜி தெ பாஸ் மாதிரி ஒஸ்தி தெ மாஸாம்....ஹையோ ஹையோ.

ஐயோ சொல்ல மறந்துட்டேன். சிலம்பரசன் எதுக்கு ஜித்தன் ரமேஷ கூட நடிக்க ஒத்துக்கிட்டாருன்னு படம் பார்த்தா தெரியும்.சிலம்பரசன் கவலையே பட வேண்டாம்.அவர் எந்த சீனிலும் சிலம்பரசனை தாண்டி நடிக்க வில்லை இல்லை முடியலை எது வேணும்னாலும் வச்சிக்கோங்க. சிலம்பரசனிடம் கடைத்தெருவில் அடி வாங்கும் போது ஒரு இரக்கத்தை கொண்டுவரனும்.வரவேயில்லை.அப்போது சிலம்பரசன் கண்ணில் நீர் வருவதை கண்ணாடிக்குள்ளே மறைக்க விரலாம் துடைக்கும் நடிப்பும் வரலை. காவல் நிலையத்தில் எல்லாம் சமாதானமாகி வெளியில் வரும் போது அர்பாஸ் கான் ஒரு பாவணை செய்வார் பார்க்கும் நமக்கே ஒரு அடி போடமாம்னு தோனும் காமெடிக்காக அந்த எண்ணம் ஜித்த்ன் ரமேஷை பார்க்கும் போதும் வருது.ஆனால் காமெடிக்காக இல்லை நிசமாலுமே உனக்கு இந்த கேரக்டர எவண்டா கொடுத்தான்னு கேட்டு அடிக்கனும்போல.சுயநலம் ஆனாலும் வெகுளி வன்மம் இல்லாத உல்கம் அறியாத கேரக்டர் அது.

நிச்சயம் சல்மானுக்கு சிலம்புவும்,அர்பாஸுக்கு ஜித்தனும் சகிக்கலை.குறிப்பா சோனாக்‌ஷிக்கு இந்த பொண்னை போட்டது ஒத்துக்கவே முடியாது ஒத்துக்கவே முடியாது.
சண்டை போடும் அடியாளோடு ரிங்டோனுக்கு டான்ஸு ஆடுவது கூடா நல்ல இல்லை என்னளவில்.வீட்டுக்கு வந்து தபாங் பார்த்தேன் கணினியில். ஒன்னு மட்டும் சொல்வேன் தபாங் இந்த ஒஸ்தியை விட ஓஸ்தி..

No comments: