Saturday 31 December 2011

நான்......நீ......நாம்.... 2


தேவதைகளின் தேவதை
======================
நேத்து நைட்டு இரண்டு மணிவரைக்கும்தான பேசிக்கிட்டு இருந்தா?,இப்ப எதுக்கு இத்தனை மிஸ்ஸ்ட் கால்?”
ஹலோ !!! சொல்லுப்பா.நான் லேட்டாத்தான் எழுந்திருப்பேன்னு தெரியும்ல பின்ன ஏன் தொந்தரவு பன்ற
ஹோ நான் உங்கள தொந்தரவு பன்றேனா?, இனிமே எந்த தொந்தரவுமே இருக்காது போதுமா. போனை வைக்கிறேன்
என்ன ஆச்சு இவளுக்கு நல்லத்தானே பேசிட்டு வைத்தோம் நேத்து.. ஹ்ம்ம்ம்ம்ம்.
சாரி டா ஹனி கோவமா?” ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் அடுத்த அழைப்பிற்கு முன்
இது எழுதப்படாத விதி எங்களுக்குள்.எப்போதுமே அடிவாங்குபவர்தான் ஸாரி சொல்லனும்.
இப்ப கூட காரணமே இல்லாமல் ஜார்ஜினாதான் கோபப்படுகிறாள். ஆனால் நான் தான் ஸாரி சொல்லவேண்டும்.
ஹலோ!!! என்னம்மா ஆச்சு ஏன் டென்ஷனா இருக்க?”
வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.இந்த வாரம் ஊருக்கு வர சொன்னாங்க.போயிட்டு மாப்பிள்ளைய பார்த்து என் விருப்பத்தை 
சொல்லிட்டா மேற்க்கொண்டு பேச வசதியா இருக்கும்னு அம்மா சொன்னாங்க.
நல்ல விஷயம்தானே.போய் பார்த்துட்டு பையன பிடிச்சிருந்தா ஓகேன்னு சொல்லிடாம்ல.அப்புறம் கல்யாணம் ஹனி.................
பீப் பீப் பீப்....கட் பண்ணிட்டா திரும்பவும்.
சாரிடா ஹனி
சாரிடா குட்டி
இம்முறை இரண்டு குறுஞ்செய்தி.
ஹலோ, சும்மா ஜாலிக்குத்தானடா சொன்னேன்?”
எது ஜாலிக்கு.? எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு.எவ்வளவு நாளா சொல்லிகிட்டு இருக்கேன் வீட்டுக்கு வந்து பேசுன்னு. கேக்குறியா நீ
சரி கூல் கூல் ஈவ்னிங் மீட் பண்ணி பொறுமையா பேசலாம்
மறுபுறம் மவுனம் மட்டுமே.
----
----
----
என்னடி எதாவது சொல்லு
ஹ்ம்ம்ம்ம்
உங்க ஆஃபிஸ் பஸ் சந்தோம் வரும்ல?
ஹ்ம்ம்ம்ம்
அதுலே வந்திடுறியா?.சர்ச் கிட்ட இறங்கிடு.நான் வண்டில வந்துடுறேன்”.
ஹ்ம்ம்ம்ம்
சாப்டியா
இல்ல
லூசு மணி 2 ஆச்சுடி சாப்பிடு ஈவ்னிங் பெசலாம்
ஹ்ம்ம்ம்ம்
லவ் யூ பேபி
இப்ப இது ஒன்னுதான் குறைச்சல்”.
---------------------
டிசம்பர் மாதத்து மாலை பொழுதுகளில் இருள் மெல்ல சூழும்பொழுது சாந்தோம் சர்ச் அலங்கரிக்கப்பட்ட மின் விளக்கு வெளிச்சத்தில் கொள்ளை 
அழகாக இருக்கும்.அங்கே போனா ஜார்ஜினாவுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். அருகில் இருக்கும் காஃபி டேவில் ஒரு காபி குடித்துவிட்டு 
அப்படியே சர்ச்க்கும் அழைத்து செல்வேன்.குறிப்பா அவள் கோபமாகவோ,வருத்தமாகவோ இருக்கும்போது.
எப்போதும் லேட்டா போற மாதிரி இந்த முறை லேட்டா போனா கொன்றுவிடுவாள்.சீக்கிரமே போயிவிட்டுருந்தேன்.
சற்று நேரத்தில் சாலையின் மறுபுறம் வந்திறங்கினாள் இன்னும் கோபம் இருக்கிறதா இல்லையா என புரிந்துக்கொள்ள விடாத ஒரு புன்னகையோடு. 
.இந்த ஒற்றைப்புன்னகையாலே கிறங்கடித்துவிடுகிறாள் கள்ளி.
பார்த்து ரோட க்ராஸ் பண்ணு.பொறுமையா.
ஹ்ம்ம் சரி சரி
இருவரும் இணைந்து காஃபி டேவுக்குள் நுழைந்தோம்.
-----------------------
என்ன சொல்ல? உனக்கு பிடிச்ச கோல்ட் காஃபியே சொல்லிடவா
பதிலில்லை.
சரி! நானே சொல்லிடுறேன்.எக்ஸ்க்யூச்மி டூ கோல்ட் காஃபி ப்ளிஸ்
இப்ப சொல்லு என்ன பிரச்சினை?” சிரித்தபடி கேட்டேன்.
தொடர்ந்து வந்த அந்த தீர்க்கமான பார்வை கோபத்தை கங்கு போல வைத்திருந்தது,கண்ணோரம் கண்ணீர் வர உத்தரவுக்காக காத்திருந்தது.
இரண்டும் சேர்ந்து வெந்நீர் ஊற்றாய் என் உள் இறங்கியது.
நான்தான் எங்க வீட்ல பேசிட்டேன் எல்லாம் ஓகேன்னு சொன்னேனடி
அத எங்க நீங்க பேசுனீங்க,நான்தானே பேசுனேன் அத்தைகிட்டயும் மாமாகிட்டயும்
இப்ப மட்டும் என்னமா கவுண்ட்டர் அட்டாக் பன்றா பாரு”,மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
--
--
சிறிது நேர மெளனம்.
--
--
சரிய்ய்ய்.... நீதான் பேசுன.இப்ப என்ன உங்க வீட்டுல வந்து நான் தான் பேசனும்.அவ்வளவுதான”?
தெரியுதுல்ல அதத்தான் எப்ப செய்ய போற?” காபியை குடிக்க எடுத்தவள் அதை சட்டென்று வைத்துவிட்டு கேட்டாள்.
ஐஸ் காஃபி கோல்டா இருந்தாலும் ஆளு இன்னும் ஹாட்டாவே இருக்காளே.ஹ்ம்ம் .வந்து பேசுறேன்
ஏற்கனவே ஒரு மாப்பிள்ளைய பார்த்துட்டாங்க நீ சீரியஸ்னஸ புரிஞ்சிக்கவே மாட்டியா
மீண்டும் கொஞ்ச நேரம் அமைதி இம்முறை இருபுறமும்.
அப்பா ஒரு முடிவு எடுத்துட்டார்னா அப்புறம் நாம் ஒன்னும் பண்ண முடியாது.அத ஏன் புரிஞ்சிக்க மாட்டுற”.
எதிர் இருக்கையில் இருந்து அவள் பக்கத்து இருக்கைக்கு சென்று அமர்ந்தேன்.தோளில் கைபோட்டபடி சோன்னேன்
கர்த்தர் மேல் ஆணையா சொல்லுறேன்.யார் எதிர்த்தாலும் நான் உன் கழுத்தில் தாலி கட்டுவதை தடுக்க முடியாது.
ஏன் மோதிரம் மாத்திக்கிட்டா ஒத்துக்க மாட்டீங்களா.
ஜோக்கா? சிரிச்சிட்டேன்”.
கைப்பையால் அடிக்க வந்தாள்.
-------------
ஆண்டனிக்கு கால் செய்தேன்.சொந்த ஊர் நாகர்கோவில் அருகில் கிராமம்.ஜார்ஜினாவின் பக்கத்து ஊர்தான். திருநெல்வேலியில் படிக்கும் போது கிடைத்த நான்கு வருட கல்லூரி நட்பு இன்னமும் நெருக்கமாகவே இருக்கிறது.சொந்த ஊரிலேயே பிஸினஸ் பண்ணிக்கிட்டு இருக்கான்.பல முறை அழைத்தும் அவன் வீட்டுக்கு சென்று பார்க்கவில்லை என்று வருத்தம்.
ஏண்டா எத்தனை நாள் வீட்டுக்கு வான்னு சொல்லிருப்பேன் அப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லுவ
இப்ப திடீர்னு வரேங்கற என்ன விஷயம்டா” 
வந்து சொல்றேன்டா
சரி எப்ப கிளம்பற
ஞாயிற்று கிழமை காலைல வரமாதிரி இருக்கேன்
சரி வா,கிளம்பறப்போ கால் பண்ணு
சரிடா,பை
-------------
விடியல் காலை நாகர்கோவில் இரயில் நிலையத்தில் இறங்கினேன்.இந்த ஊரும் அழகாகத்தான் இருக்கு என்னவளைப் போல.
சரி விடு மாப்பிள்ளை ஆயிட்டா அடிக்கடி வந்துபோகத்தானே போறோம்.
டேய் மச்சி”.பின்னாள் வந்து தோள் தொட்டு இழுத்தான் ஆண்டனி.
கட்டி அனைத்தபடி கேட்டேன்,”வாடா எப்படி இருக்கற
ஏன் ஊருக்கு வந்துட்டு நீ என்னைய விசாரிக்கிறியா எப்படி இருக்கன்னு நீ எப்படிடா இருக்க.
ஆமாம் பெரிய ஊரு. பட்டிக்காடுதான இது
அடிங்ங்ங்
சரி நான் எதுக்கு வந்தேன்னு..........
அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.. அம்மா வீட்டுல உன்க்காக டிஃபன் செஞ்சுட்டு இருக்காங்க முதல்ல வீட்டுக்கு போய் குளிச்சிட்டு  சாப்பிடலாம் 
பிறகு பேசலாம்.இப்ப வண்டில ஏறு போலாம்”.என்றான்
இந்த ஊர் காரனுங்க வரவேற்பும் நல்லாத்தான் இருக்கு.
--------------
உள்ளே நுழையும் போது ஆண்டனியின் அம்மா வரவேற்றார்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
என்னப்பா கைலாஷ் நாளு வருஷம் ஒன்னா படிச்சிருக்கீங்க.ஆண்டனி உன்ன பத்தி சொல்லிகிட்டே இருப்பான்.நீயும் வருவேன்னு பலமுறை எதிர்பாத்து ஏமாந்தாச்சு.இத்தனை வருஷம் கழிச்சு இப்பதான் வந்திருக்க சந்தோஷமா இருக்கு.
எங்கம்மா எனக்கும் வரணும்னு ஆசைதான் ஆனா நேரம்தான் கிடைக்கிறதில்லை.
அதும் சரிதான் எது எப்ப நடக்கனும்னு நாமளா முடிவு பன்றோம் கர்த்தரே செய்கிறார்.
வீட்டில அப்பா அம்மா நலமா?”
நல்லா இருக்காங்கம்மா.நீங்களும் அப்பாவும் நலமா?”
நல்லா இருக்கோம்ப்பா. ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்.
சரிம்மா
இட்லியும் கத்திரிக்கா தொக்கும் கமகமத்த்து
ரொம்ப நல்லா இருக்கும்மா
நன்றிப்பா..சரிப்பா இன்னிக்கு ஞாயிற்று கிழமை இல்லையா நான் சர்ச்சுக்கு போறேன்.நீயும் வாயேன்.
இல்லம்மா, சென்னைல சர்ச்சுக்கு போயிருக்கேன் இங்க எப்படின்னு தெரியல.
கர்த்தர் கிருஸ்தவனை மட்டுமே ஆசிர்வதிப்பதில்லை.நீயும் மேய்ப்பனின் அன்பிற்க்குறிய ஆட்டுக்குட்டியே நீயும் வரலாம் தாராளமாக இங்கு இருக்கற 
திருச்சபைக்கும்
சரிம்மா நீங்க போங்க.நான் ஆண்டனி கூட வரேன்.
சரிப்பா நான் கிளம்பறேன்.
----------------------------
டேய் இது எப்ப இருந்துடா
எது
நான் எத்தன தடவ கூப்பிட்டுருக்கேன் என் கூட  சர்ச்சுக்கு வந்ததே இல்லை. அது சரி நீ கோவிலுக்கே போகமாட்ட
ஹ்ம்ம்ம் சொல்லுறேன் கிட்டத்தட்ட என் வேலைய குறைச்சிட்ட.நம்ம ஜூனியர் ஜார்ஜினா இருக்காள்ல
ஆமாம்
அவள நான் லவ் பன்றேன்,அவளும்......”.
எப்படிடா? காலெஜ்ல நான் உன் கூடவே தானடா இருப்பேன் .நீ அவ கூட ஒரு வார்த்தையும் பேசிப்பார்த்ததில்லையேடா
இல்லை அவ என் கம்பெனிலதான் முதல்ல ப்ளேஸ் ஆனா
ஹோஹோ...அதல்லாம் சரிதான் அவங்க ஃபெமிலி ரொம்ப ஆர்த்தோடக்ஸ்டா.அவங்க அப்பா தீவிர கிருஸ்தவர்.அவளோட தம்பிய ஊழியத்திற்க்காகவே அர்பணித்துவிட்டார். விவிலியம்தான் அவங்களுக்கு எல்லாமேன்னு நினச்சு வாழறவங்க.நம்ம ஊர் திருச்சபைல விக்டர் குடும்பம்னா ரொம்ப மரியாதை.இது அவங்க ஒரு முகம்.அவங்க அண்ணன் ஒருத்தர் இருக்காரு ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்றார். இந்த ஏரியாவுல முக்கிய புள்ளி.அடிதடி கட்டப்பஞ்சாயத்தெல்லாம் உண்டு.அவங்க அப்பா கூடப்பிறந்தவங்கன்னு சேர்த்து அவங்க பெரிய குடும்பம்.இருந்தாலும் ஜார்ஜினா அப்பா சொல்றத மீறி அவங்க ஒட்டு மொத்த குடும்பத்துல யாரும் எதையும் செய்ய மாட்டாங்க.அதனால் கொஞ்சம் யோசிச்சு செய்.”,என்றான் ஆண்டனி.
நான் பேசிக்கிறேன் நீ கூட மட்டும் வா பயமா இருந்தா வீட்டை மட்டு காட்டிவிடு நான் பார்த்துக்கறேன்”.
டேய்!  நான் சொன்னது பயத்தால இல்ல.ஒரு எச்சரிக்கைக்காக  உன்ன சும்மா அனுப்பி விடுறதுக்கா நான் இருக்கேன்.இன்னொரு தடவ அப்படி பேசுன கடுப்பாயிடுவேன் சொல்லிட்டேன்.கிளம்பு போவோம்.
------------------
வீட்டில் நுழைந்த போதே அந்த ஆஜானுபாகுவான சிகப்பு உருவம் எங்களை வரவேற்றது.தேக்கு உத்திரத்துடன் இருந்த கொஞ்சம் பழங்காலத்து வீடு 
அது.அடிப்படையில் கிருஸ்தவர் வீட்டிற்கானஅடையாளங்களுடன் இருந்தது.குழந்தைகள் நடுத்தர வயதினர் என சற்றே பெரியதொரு கூட்டுக்குடும்பம் அது. ஞாயிறு பிராத்தணை கூட்டம் முடித்து வீடு திரும்பி விருந்துண்டு கூடி பொழுதை கழித்துக்கொண்டிருந்தனர்.
ஸ்தோத்திரம், வாங்க உக்காருங்கஎன்றார் ஜார்ஜினாவின் தந்தை எங்களை பார்த்து.
அறைகுறையாய் பதிலுக்கு ஸ்தோத்திரம் சொல்லி அமர்ந்தோம்.மனதுக்குள் சிக்கிட்ட கைலாஷ்னு பட்சி சொல்லிகொண்டே இருந்தது.
யார் தம்பி நீங்க”? கணிவும் கம்பீரமும் சேர்ந்திருந்தது அந்த குரலில்.
என் பேரு கைலாஷ். சென்னையில் சாஃப்ட்வேர் எஞ்சீனியரா இருக்கேன்.அப்பா அம்மா சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ரிடையர்டு.
நான் ஜார்ஜினா கூட கல்லூரியில் ஒன்னா படிச்சேன்.நானும் ஜார்ஜினாவும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறோம்.அதான் உங்க கிட்ட முறைப்படி பொண்ணு கேட்டு.....
அடுத்த நொடி நெஞ்சிலே யாரோ உதைத்ததுபோல் இருந்தது.தரையில் பொத்தெனெ விழுந்தேன்.சுதாரித்து பார்த்தேன்.ஜார்ஜினாவின் பெரிய அண்ணன்தான் என்னை தாக்கியது.வார்த்தை தடித்து வந்தது.ஏண்டா என்ன திமிர் உங்களுக்கு. இன்னோர் மதத்துகாரவங்க வீட்டுல மட்டு மரியாதை இல்லாம நுழஞ்சதுமில்லாம.எங்க வீட்டு பொண்ண பத்தி பேச என்ன தைரியம்.இனி ஒரு நிமிஷம் இங்க இருந்தீங்க நடக்குறதே வேற.
அவசரப்படாத இம்மானுவேல்”,மேலும் சூழ்நிலை சூடாகாமல் இருக்க கையை குறுக்கே நீட்டி நிறுத்தினார் ஜார்ஜினாவின் தந்தை.கடுங் கோபம் வந்தது எனக்கு.என்ன ஆனாலும் பரவாயில்லை பதிலுக்கு இவனுக்கு ஒன்று கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.
ஜார்ஜினாவின் தந்தை அமர்ந்திருந்த பின் புறம் உள்ள கதவறுகே சேலை தலைப்பில் தலையை போர்த்தி நின்றிருக்கும் ஜார்ஜினாவின் விரலில் 
நடுக்கத்தையும் கண்ணில் வந்த நீரையும் கண்டு கரைந்து போனேன்.அதற்குள் ஆண்டனி என்னை சரி செய்து தூக்கி விட்டு ஜார்ஜினாவின்  
அண்ணனை தாக்க எத்தனித்தான்.கணத்திற்கும் குறைவான நேரத்தில்,அவன் கையை பிடித்து உள்ளங்கையை அழுத்தினேன். 
ஆண்டனி காராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கியவன்.ஒருமுறை என்ன அறைந்துவிட்ட சீனியர் ஒருவனை கல்லூரி மைதானத்தில் புரட்டி எடுத்தவன். 
என்ன ஒருவன் அடித்தால் விடுவானா என்ன.இருந்தும் நான் அவன் உள்ளங்கையை பிடித்து கட்டைவிராலால் கொடுத்த அழுத்ததை புரிந்துக்கொண்டு நிறுத்தினான் கோபம் மட்டும் தனியாமல்.
அதற்குள் வீட்டிலிருந்த அனைவரும் அவரவர் வேலைகளை விட்டு அங்கே குழுமிவிட்டனர்.
ஆண்டனி காதருகே சென்று சொன்னேன்.மச்சான் உன் தங்கச்சிய பாருடா அவளுக்காக கொஞ்சம் பொறுமையா இரு நான் பேசிக்கிறேன்”.
எதோ பண்ணு”, என்றான் பல்லைக்கடித்துக்கொண்டே.
பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே இவர்களை மன்னியும் இவர்கள் இன்னது செய்கிறேன் என்று அறியாமல் இருக்கிறார்கள்.இவர்கள் பாவத்தை 
கழுவி உயிர்த்தெழும் நாளில் இவர்களையும் உம்முடன் அழைத்து செல்வீறாக” ,தொடர்ந்தேன்.
நானும் ஜார்ஜினாவும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறோம்.இதுல என்ன தவறு இருக்கு.நான் வேற மதத்தவன் என்பதாலா.
யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார்(உரோமையார் 10:12).பிற இனத்தவராகிய நீங்களும் இயேசுகிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப்பெற்றிருக்கிறீர்கள்(உரோமையார் 1:6). அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்(யோவான் 1:12).ஏனெனில் கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை(உரோமையார் 2:11).”
அவர் பேரைச்சொல்லி மனிதரில் இனம் காணுவது நீங்களே.இதை அவர் மன்னிக்க மாட்டார்.எண்ணங்களை மனிதர் எண்ணலாம்; ஆனால், எதற்கும் 
முடிவு கூறுபவர் ஆண்டவர்.(நீதிமொழிகள் 16:1).” 
யாரிடமும் பதிலில்லை.
கர்த்தர் ஜார்ஜினாவை இந்த கைலாஷின் விலா எலும்பில இருந்துதான் படைத்திருப்பாராயின் கர்த்தரை எதிர்த்துதான் உம்மாலே ஏதும் செய்ய 
இயலுமா கேட்கிறேன்.” 
கடைசியாக ஜார்ஜினாவை பார்த்து சொன்னேன் எல்லோருக்கும் முன்னாடியே வைத்து.என் அன்பே, நீ அழகே உருவானவள், உன்னில் மாசு மறுவே கிடையாது.( உன்னத சங்கீதம் 4:7)”
பரிசுத்தமான காதலும் அன்பும் எம் பக்கம். கர்த்தரும் எம்பக்கம் உம்மால் முடிந்ததை பாரும்.என்று கூறி சட்டென்று அங்கிருந்து வெளியேறினேன் 
ஆண்டனியோடு.அவனும் அதிர்ந்தே போனான்.
இன்னும் அடங்காத கோபம் கொண்டிருந்த ஜார்ஜினாவின் அண்ணன் எங்களை பின் தொடர முயற்சிக்க அவரை ஜார்ஜினாவின் தந்தையின் குரல் தடுத்து நிறுத்துவது கேட்டது.
வீட்டுக்கு வந்தவரை பேசிக்கொண்டு இருக்கும் போதே அடித்த நீ கிருஸ்தவனா.காதலும் கர்த்தரும் எம் பக்கம் இருக்கிறார்கள் என அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பவர் கிருஸ்தவரா”.
திருச்சபை பக்கம் வரவே யோசிக்கும் நீ கிருஸ்தவனா இல்லை.வேறு மதமாக இருந்தாலும் வேதாகமத்தையே தனக்கு வலிமையாய் நினைக்கும் அவர் கிருஸ்தவரா”.
ஆமாம் அவர் பேசியது வெறும் கோபத்தில் உதிர்த்த வார்த்தைகள் இல்லை.சங்கீதமும்,உரோமையாரும்,யோவானும் சொன்னதை சொல்கிறார்.அதற்கு நம்மிடம் பதில் கிடையாது.
அப்பா!!!!!!”.
போகட்டும் விடு
---------------------
மறுநாள் ஜார்ஜினா அழைத்தாள்.குரலில் அதிகமான சந்தோஷம் தெரிந்தது.
"ஹெலோ...கலக்கிட்டடா செல்லம்
அப்படியா நானா எப்போ
பின்ன அப்பா ஓகே சொல்லிட்டாரு தெரியுமா.அத்தை மாமாவ அழச்சிட்டு வந்து பேசச்சொல்லியிருக்காரு.
கண்டிப்பா பேசிடலாம்.ட்ரீட் கிடையாதா?”
கண்டிப்பா, எவ்வளவு பெரிய வேலை செஞ்சிருக்க நீ. உனக்கு கண்டிப்பா உண்டுடா செல்லம்”.
இன்னும் எவ்வளவு பெரிய வேலையெல்லாம் மிச்சம் இருக்கு.அதுக்கு நீ தான் உத்தரவு போடனும்
அடி வாங்குவே படவா நீ,கொஞ்சம் விட்டாலே போதுமே
அதான் வீட்டிலே கூட ஓகே சொல்லிட்டாங்களேடி
அதுக்காக
சரி விடு
இனி விட முடியாது
அப்ப கட்டிக்கோ
இப்போதைக்கு தலையணைய கட்டிக்கோ
சரி நான் போனை வைக்கிறேன்
லவ் யூ டா மாமா
அதை நீயே வச்சுக்கோ
--------------------------------
அடுத்து வந்த நல்லதொரு நாளில் அப்பா அம்மாவை அழைத்துகொண்டு சென்றேன் ஜார்ஜினா வீட்டுக்கு.இப்படித்தான் ஆரம்பித்தார் ஜார்ஜினாவின் அப்பா.பாருங்க நாங்க பரம்பரை கிருஸ்தவர்.எங்க சமூகத்துல ஒரு இந்துவுக்கு மணமுடித்து கொடுத்தோம்னா அவரையும் கிருஸ்தவரா 
மாறச்சொல்லுவோம்.ஆனா மாப்பிள்ளை இப்பவே ஒரு கிருஸ்தவர் போலத்தான் இருக்கிறார்.எங்க வீட்டு பிள்ளைகளை விட வேதாகம வசனங்களை அழகாக சொல்கிறார்.
அம்மா என்னை திரும்பி பார்த்தார்.இது எப்போடா?”,என்பது போல
நானும் கேனத்தனமா ஒரு சிரிப்பு சிரிச்சு வைத்தேன்.
அப்பா தொடர்ந்தார், ”சம்பந்தி நாங்க முற்போக்கு குடும்பம் எங்களுக்கு மதத்துல எல்லாம் பெரிய நம்பிக்கை கிடையாது. ஆனா மத்தவங்க நம்பிக்கைக்கு கண்டிப்பா மரியாதை தருவோம்.இதோ என் மகன் நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க”,என கையை பிடித்து இழுத்துவிட்டபடி சொன்னார்.
எங்களுக்கு வேண்டியது ஜார்ஜினா செல்லம் எங்க வீட்டுக்கு மருமகளா வரணும் அவ்வளவுதான்”,அம்மா சொன்னார்.
அப்ப செய்ய வேண்டிய சீரெல்லாம்”, ஜார்ஜினாவின் தந்தை கேட்டார்.
அதான் சொன்னோமே எங்க குடும்பத்தை பத்தி.,அதனால் நாங்க ஏதும் எதிர்ப்பார்ப்பது இல்லை.ஆனால் அது உங்கள் கெளரவத்தில் தலையிடுவதாக இருந்தால் உங்கள் விருப்பம் போல் செய்திடுங்க
சரி அப்படியே செஞ்சிடலாம்அனைவரும் சாப்பிட்டு முடித்து அமர்ந்தோம்.சரி வர அக்டொபர் 12 தெதிக்கு திருமணத்த வச்சிக்கலாம்.
எல்லாரும் சரியென்றார்கள்.
------------------------------
முதல்நாள் இரவு முடிந்த காலை.ஜார்ஜினா மெத்தையில் அமர்ந்து காபி அருந்த அவள் கால விரல் நகப்பூச்சுவை அகற்றிக்கொண்டிருந்தேன்.
ஏங்க,என் கூட சர்ச் வருவீங்க ஓகே ஆனா பைபிள இந்த அளவுக்கு மனப்பாடம் பண்ணிருப்பீங்கன்னு நினச்சி பார்க்கலை
யார் மனப்பாடம் பண்ணுனா
நீங்க!!!
சிரித்துவிட்டேன்
அப்ப எப்படி அன்னைக்கு.
உனக்கு ஒரு கிஃப்ட் கொடுத்தேனே நேத்து திருச்சபைல மோதிரம் மாத்தறப்போ பார்த்தியா
இல்லையே இருங்க பார்க்கிறேன்.என்னது இது எதோ பேப்பர் மாதிரி
-----
உரோமையார் 10:12
உரோமையார் 1:6
யோவான் 1:12
நீதிமொழிகள் 16:1
-----
அடப்பாவி இது என்ன பிட்டா.அன்னைக்கு எல்லார் முன்னாடியும் பேசுனது அப்படியே இருக்கு இதுல.
யெஸ் யெஸ்
நீங்க பேசிட்டு போன பிறகு அப்பா ரொம்பவே ஆச்சர்யப்பட்டுப்போனார்.அவர் இம்ப்ரஸ் ஆனது இதுலதான்.அவர் ஏமாந்து போயிட்டதா தெரிஞ்சா  அவ்வளவுதான்.
ஆகட்டும் பார்க்கலாம்.என்றேன் விளையாட்டாக.
---------------------------
ஜார்ஜினா வீட்டுக்கு வந்திருந்த திருச்சபை பங்குத்தந்தையை வரவேற்று அவரிடம் என்னை அறிமுகம் செய்தார் ஜார்ஜினாவின் தந்தை இவ்வாறு.
வாங்க ஃபாதர் ஸ்தோத்திரம்,இவர்தான் என் மருமகப்பிள்ளை நீங்கதானே திருமணம் செஞ்சு வச்சீங்க.
ஆமாம், ஸ்தோத்திரம் தம்பி” ,என்றார் என்னை பார்த்து.
ஸ்தோத்திரம் ஃபாதர்
நலமா இருக்கீங்களா
நலமாகவே இருக்கேன் கடவுள் கிருபையில்
நம்ம திருச்சபைல ஒரு வழக்கம் உண்டு வீட்டுக்கு ஒருவர் வாரக்கூட்டத்தில் திருச்சபை பங்குத்தந்தையின் பிரசங்கம் முடிந்த பின்பு பைபிளில் இருந்து ஓரிரு அதிகாரத்தில் பிரசங்கம் செய்ய வேண்டும் .இது எங்கள் ஊர் மரபு.உங்க பெரிய மச்சான் செய்யனும் ஆனா அவன் செய்வது இல்லை. ஏதேதோ காரணம் சொல்லி தவிர்த்திடுறான்என்றார்.
மேலும் பங்குத்தந்தையை பார்த்து ஒரு வாரத்துல  நம்ம மாப்பிள்ளைய செய்ய சொல்லலாம்னு இருக்கேன்”, என்றார்
தாராளமா செய்யட்டுமே”,என்றார் குருவானவர்.
மாப்பிள்ளை எப்ப உங்களுக்கு வசதிப்படும்னு சொல்லிடுங்க
இதுவரை எந்த தேர்வுக்கும் வராத பயம்,எந்த நேர்காணலிலும் வராத படபடப்பு தொற்றிக்கொண்டது.
அது வந்து மாமா......ஜார்ஜினாவை ஒரு வார்த்த கேட்டுட்டு” ,இழுத்தேன்.
அட இதுக்கு எதுக்கு மாப்பிள்ளை அவளை கேட்டுக்கிட்டு” ,சிரித்தார்கள் இருவரும்.
ஹ்ம்ம்ம் சரி கேட்டு சொல்லுங்க நான் ஐயா கிட்ட சொல்லிடுறேன்”,ஜார்ஜினாவின் அப்பா.
சரி மாமா”,எழுந்து உள்ளே நடந்தேன்.
நல்ல மாப்ளதான் உங்களுக்கு அமஞ்சிருக்கார் விக்டர்.,ஜார்ஜினாவ கேக்காம ஏதும் செய்ய மாட்டார் போல”,
ஆமாம்”,மீண்டும் சிரிப்பொலி எழுந்து அடங்கியது.
---------------------------------
தல கிருஸ்துமஸும் முடிந்து இரண்டாவது கிருஸ்துமஸும் வந்துவிட்டது.நாங்கள் இருவர் நால்வராகவும் ஆகிவிட்டோம்.
இத்தனை நாளாய், “ ஆஃபிஸ்ல வேலை அதிகம்,ஆன்சைட்,உடம்புக்கு முடியலை.இப்படி பல காரணங்களை சொல்லி தப்பித்துக்கொண்டே இருந்தேன். 
இந்த வருட கிருஸ்மஸுக்கு எங்கள் இரட்டை செல்வங்கள் இருவருக்கும் பெயர்சூட்டி ஞானஸ்நானம் செய்யப்போகிறோம் அவர்கள் திருச்சபையில்.அப்பொழுது என்னுடைய பிரசங்கம் கண்டிப்பாக உணடு என்று எல்லாரிடம் சொல்லிவிட்டார் ஜார்ஜினாவின் அப்பா.
அவரிடம் உண்மையை சொல்லியிருந்தால் என்னை மன்னித்திருப்பார்.தந்தை உள்ளம் கொண்ட மாமன் அவர்.
இருந்தும் அவர் மனசு வருத்தம் கொள்ளக்கூடாது.அது தவறு என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டே இருந்ததால்.
அவருக்காகவே படித்தேன்.புதிய ஏற்பாடும் பழைய ஏற்பாடும் அத்துப்படி ஆகிவிட்டது இப்போது.நல்லதொரு பிரசங்கம் கொடுப்பேன் என்று 
நம்புகிறேன்.கர்த்தர் என் கூட இருக்கனும்.இதோ நாகர்கோவில் எக்ஸ்ப்ரெஸில் ஊருக்கு விரைந்துக்கொண்டிருக்கிறோம்.. 
-----------------------------------
என்னங்க சாப்பிடலாம். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன ஜெபம் பண்ணிடலாம்.
சரிடா,பண்ணிடலாமே
லவ் யூ டா
மீ டூ குட்டி
கர்த்தராகிய இயேசு கிருஸ்துவின் நாமத்தில் பால்
----
----
----
ஆமென்”.